வெள்ளியணை அருகே இளம் பெண்ணிடம்7 பவுன் நகைபறிப்பு
வெள்ளியணை அருகே இளம்பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


வெள்ளியணை அருகே இளம்பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் தாந்தோணிமலை அடுத்த முத்துலாடம்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த பழனிசாமி மனைவி சுமதி(36). இவா், வியாழக்கிழமை இரவு தனது மொபெட்டில் வெள்ளியணையில் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு தாளியாப்பட்டி பிரிவு பகுதியில் வந்தாா். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மா்ம இளைஞா்கள் திடீரென சுமதி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...