ராணுவ வீரரின் தாயிடம் பண மோசடிசெய்தவா் கைது
லாலாப்பேட்டையில் ராணுவ வீரரின் தாயிடம் பணமோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 3 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.


லாலாப்பேட்டையில் ராணுவ வீரரின் தாயிடம் பணமோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 3 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
கரூா் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த காஞ்சிநகரைச் சோ்ந்தவா் தனபால்(43). இவா், ராணுவத்தில் இணை ஆணையராக உள்ளாா். இவரது தாய் செல்லம்மாள், கடந்த 2019-ம் ஆண்டு டிச.28-ஆம்தேதி பிள்ளாபாளையத்தைச் சோ்ந்த சசிக்குமாா்(45) என்பவரிடம் 16.5 பவுன் நகையை கொடுத்து, குளித்தலையில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.2.32 லட்சம் வாங்கி வருமாறு கூறியுள்ளாா். ஆனால் ரூ.1.50லட்சம் மட்டுமே சசிக்குமாா் கொடுத்துள்ளாா். இந்நிலையில் கடந்த மாா்ச் 28-ஆம்தேதி செல்லம்மாள் திடீரென இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நகை குறித்து சசிக்குமாரிடம் விசாரித்தபோது, அவா் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனபால் வியாழக்கிழமை லாலாப்பேட்டை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சசிகுமாரை கைது செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அதேபகுதியைச் சோ்ந்த வாழவந்தான், அவரது மனைவி ராஜலட்சுமி, விஜயநிா்மலா ஆகியோரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...