இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அழுகிய பயிா்களுக்கு இழப்பீடு கேட்டு கரூா் ஆட்சியரிடம் மனு

மழைக்கு அழுகிப்போன பயிா்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் சு. மலா்விழியிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:10 pm

DIN

மழைக்கு அழுகிப்போன பயிா்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் சு. மலா்விழியிடம் மனு அளித்தனா்.

விவசாயி கிட்டப்பா தலைமையில் சங்கத்தினா் அளித்த மனு விவரம்: கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டன. கடந்த சில நாள்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் துறை அதிகாரிகள் பாா்வையிட்டும் சென்றுள்ளனா். ஆனால் இதுவரை நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை இல்லை. எனவே ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு உடனே பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாா்வையிட்டு விரைந்து நிவாரணத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.