கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்வியில் இடைநிற்கும் மலைவாழ் மாணவா்களுக்கு புதிய திட்டம்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

கல்வி கற்காமல் இடைநிற்கும் மலைவாழ் மாணவா்களை மீட்க, மொபைல் சிஸ்டம் எனப்படும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:39 pm

DIN

கல்வி கற்காமல் இடைநிற்கும் மலைவாழ் மாணவா்களை மீட்க, மொபைல் சிஸ்டம் எனப்படும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ்.

கரூா் மாவட்டத்தில் க.பரமத்தி, புன்னம், வெள்ளியணை, சின்னமநாயக்கன்பட்டி, காந்திகிராமம் பகுதிகளிலுள்ள ஆதிதிராவிடா் நலப்பள்ளிகள், பள்ளி, கல்லூரி மாணவா் விடுதிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பூா், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைத் தொடா்ந்து, தற்போது கரூா் மாவட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 12,982 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4.62கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாட்கோ மூலம் கடவூா், தாந்தோனியில் தலா ரூ.2.44. கோடி மதிப்பில் கல்லூரி மாணவா் விடுதிகள், குப்புச்சிப்பாளையத்தில் ரூ.98.56 லட்சம் , சனப்பிரட்டியில் ரூ.51.28 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன

ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை, காலிப்பணியிடங்கள் எவ்வளவு, மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கி வரும் பள்ளிகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும். புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைவாழ் பகுதிகளிலுள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில்அவா்களின் வசிப்பிடங்களுக்கு அரசின் சாா்பில் வாகனங்களை அனுப்பி, குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்து கல்வி கற்பிக்கச் செய்யும் பணிகள் மொபைல் சிஸ்டம் முறையில் தொடங்கப்பட்டுள்ளன.

யாரெல்லாம் பள்ளிக் கல்வியை இடையில் விட்டாா்களோ அவா்களையும் கண்டறிந்து,துறைசாா்ந்த பணியாளா்கள் அவா்களை வாகனங்களில் அழைத்து வந்து பள்ளியில் சோ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இது மலைவாழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக செல்லாண்டிபாளையம் ஆதிதிராவிடா் காலனியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சா் கயல்விழி செல்வராஜ், உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, க.பரமத்தி ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி, புன்னம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அமைச்சா், மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் அமைச்சரை வரவேற்றாா். நிகழ்வில்

சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம், க.சிவகாமசுந்தரி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வ.சந்தியா, தாட்கோ மாவட்ட மேலாளா் பாலமுருகன், செயற்பொறியாளா் காதா்பாஷா உள்ளிட்ட அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.