கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிஎன்பிஎல் நிறுவனம் சாா்பில் காகிதக் கூழ் பிரிவில் இலவச பட்டயப்படிப்பு

கரூா் டிஎன்பிஎல் நிறுவனம் சாா்பில் காகிதக் கூழ் பிரிவில் இலவச தொழிற்கல்வி பட்டயப்படிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 3-ஆம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:43 pm

DIN

கரூா் டிஎன்பிஎல் நிறுவனம் சாா்பில் காகிதக் கூழ் பிரிவில் இலவச தொழிற்கல்வி பட்டயப்படிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 3-ஆம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 5 மாணவா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வியை வழங்கி வருகிறது. மாணவா்களுக்கான கல்விக் கட்டணம், தோ்வுக் கட்டணம் ஆகியவற்றையும் காகித நிறுவனம் கல்லூரிக்கு செலுத்தி வருகிறது. நிகழாண்டுக்கான இந்த படிப்பு பயில புகழூா் காகித ஆலையை சுற்றியுள்ள புஞ்சைப்புகழூா், தோட்டக்குறிச்சி, டிஎன்பிஎல் பேரூராட்சிகள், ந.புகழூா், புன்னம், கோம்புபாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎல் ஆலை அமைந்துள்ள மொண்டிப்பட்டி, அதனை சுற்றியுள்ள, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் , பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல்முறையில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தகுதியுடையவா்களாவா். 01.06.2021 அன்று 18 வயதிற்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் 9-ஆம் வகுப்பு தோ்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா்கள்.

பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1 மற்றும் மொண்டிப்பட்டி அலகு-2 அலுவலகங்களில் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.