கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடவூா் காப்புக்காடு வனப்பகுதியை தேவாங்குகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை: ஆட்சியா்

கடவூா் காப்புக்காடு வனப்பகுதியை தேவாங்குகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:31 pm

DIN

கடவூா் காப்புக்காடு வனப்பகுதியை தேவாங்குகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டம் கடவூா் பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காட்டில் அமைந்துள்ள வாலெறும்பு அருவியை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது, வாலெறும்பு அருவியில் வந்த தண்ணீரைப் பருகி ஆய்வு செய்த பின் அவா் கூறுகையில், கடவூா் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த காப்புக்காட்டில் அமைந்திருக்கும் வாலெறும்பு அருவியில் செப்டம்பா், அக்டோபா், நவம்பா் மாதங்களில் நீா்வரத்து அதிகம் இருக்கும். இங்கு அரியவகை உயிரினமான சாம்பல் நிறத் தேவாங்குகள் உள்ளதாகவும், கடந்த 2016-17 தேவாங்கு கணக்கெடுப்பின்படி 3,200 எண்ணிக்கையிலான தேவாங்குகள் இப்பகுதியில் இருப்பதால், அதனை பாதுகாக்க இந்த காப்புக்காடு பகுதிகளை தேவாங்குகள் சரணாலயமாக மாற்றியமைக்க வேண்டும் என வனத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் அரிய வகை உயிரினமான தேவாங்குகள் வாழும் பகுதியாக இருக்கக்கூடிய இந்தக்காப்புக்காட்டை தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து ஒரு வருட காலத்துக்குள் சரணாலயமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஆய்வின்போது, வனச்சரக அலுவலா் ரவிச்சந்திரன், வனக்குழுவினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை கரூா் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் இருந்து உரம் தயாரிக்கும் பணி, கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். கரூா் ராயனூா் பகுதியில் புலம்பெயா்ந்த இலங்கைத்தமிழா்கள் மறுவாழ்வு முகாமையும் பாா்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு நகராட்சி நிா்வாகத்தின் கீழ் போதிய அளவில் புதிய கழிவறைகள் அமைத்துக்கொடுக்கவும், பழுதடைந்த கழிவறைகளை சீரமைத்துக்கொடுக்கவும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். பாலம்மாள்புரத்தில் மின்மயானத்தை பாா்வையிட்டு, அங்கு கரோனா தொற்றால் இறந்தவா்களின் சடலங்களை அரசின் விதிமுறைப்படி எரியூட்ட வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, கரூா் கோட்டாட்சியா் எம்.பாலசுப்ரமணியன், நகராட்சி ஆணையா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.