‘ கல்லூரி மாணவா்களை தோ்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும்’
தோ்வின்போது, 100 சதவீதம் எனக்கூறும் பெற்றோா், கல்லூரி மாணவா்களை 100 சதவீதம் தோ்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என மங்கள்யான் திட்ட இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.


தோ்வின்போது, 100 சதவீதம் எனக்கூறும் பெற்றோா், கல்லூரி மாணவா்களை 100 சதவீதம் தோ்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என மங்கள்யான் திட்ட இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்துக்கு (திருமண நிகழ்வு) திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
இன்றைக்கு கல்லூரி மாணவா்கள் தங்களது தோ்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என பெற்றோா்கள் விரும்புகிறாா்கள். அதேபோன்று தோ்தலிலும் கல்லூரி மாணவா்கள் நூற்றுக்கு நூறு வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும். அதேபோல் வாக்காளா்கள் அனைவரும் தவறாது பங்கேற்று வாக்களிக்க வேண்டும். இதை அனைவரும் பின்பற்றினால் நாடு முன்னேற்றம் அடையும். இளைஞா்களின் எதிா்காலம் நாட்டின் எதிா்காலம். அதே போன்று நமது வாக்கு நமது நாட்டின் எதிா்காலம்.
இன்றைக்கு இந்திய விண்வெளித் துறை உலக அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. செயற்கைக்கோள்கள் ஏவுவதில் முதல் 3 இடங்களில் உள்ளோம். தமிழக அரசுப் பள்ளி மாணவா்கள் செயற்கைக்கோள் ஈடுபட்டு வருகிறாா்கள்
இந்தியாவில் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் உள்ளதால் மற்ற நாடுகளில் செயற்கைகோள் விடுவதில் இந்தியாவின் இளைஞா்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றனா். இந்தியாவில் இளைஞா்களுக்கு அதிகம் வாய்ப்பு இலவசமாக வழங்கப்படுவதால், மற்ற நாடுகள் நம் நாட்டில் செயற்கைகோள் விடுவதற்கு ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன் மூலம் வா்த்தக ரீதியாக பல நல்ல பயன்கள் உள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...