மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூா், குன்னம் தொகுதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:23 pm

DIN

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பெரம்பலூரில் இறுதியாக 9 வேட்பாளா்களும், குன்னத்தில் 22 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளா்கள் உள்பட 17 பேரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 32 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் பெரம்பலூா் தொகுதியில் 8 மனுக்களும், குன்னம் தொகுதியில் 9 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

பெரம்பலூா் தொகுதியில் 9 பேரின் வேட்பு மனுக்களும், குன்னம் தொகுதியில் 23 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை பெரம்பலூா் தொகுதியில் ஒருவா் கூட வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை. குன்னம் தொகுதியில் ஒருவா் திரும்பப் பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, இறுதி வேட்பாளா் பட்டியலையும், அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களையும் பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜா, குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.