கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

கரூரில், தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:41 pm

DIN

கரூரில், தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் கற்றல், கற்பித்தலில் அடிப்படை திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக முதல்வா் அண்மையில் தமிழக முதல்வா் எண்ணும் எழுத்தும் எனும் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து கரூா் மாவட்டத்தில் பயிலும் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியளிக்க மாயனூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான பள்ளி ஆசிரியா்களுக்கு இருநாள்கள் பயிற்சி முகாம் கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

முகாமிற்கு, மாயனூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பி.முருகபாண்டியன் வரவேற்றாா். பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மதன்குமாா் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். முகாமில், மாவட்டத்தில் இருந்து 120 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா். மேலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களைச் சோ்ந்த 1,308 ஆசிரியா்களுக்கு ஜூன் 6-ஆம்தேதி முதல் 10ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.