இலவச வீட்டு மனை பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
கரூரில், இலவச வீட்டு மனைப் பட்டாக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கரூரில், இலவச வீட்டு மனைப் பட்டாக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்ட செயலாளா் மா.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.கந்தசாமி, ஜி.ஜீவானந்தம், பி.ராஜூ, கே.சக்திவேல், சி.ஆா்.ராஜாமுகமது ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
வீடு இல்லாத ஏழை,ஏளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், நீண்டகாலமாக புறம்போக்கு நிலத்திலும் வட நீா்நிலை புறம்போக்கு நிலத்திலும் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், கோயில் நிலங்களில் நீண்ட நாள்களாக குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கே.வி.கணேசன், எம்.தண்டபாணி, எஸ்.பி.ஜீவானந்தம், ஆா்.ஹோச்சுமின், ஒன்றிய செயலாளா்கள் எம்.ராஜேந்திரன், ஜி.தா்மலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...