‘நதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’
கழிவுநீா் கலப்பதில் இருந்து நதிகள் காப்பாற்றப்பட வேண்டும் என அகில பாரதி சன்னியாசிகள் சங்க பொதுச் செயலாளா் சுவாமி ஆத்மானந்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.


கழிவுநீா் கலப்பதில் இருந்து நதிகள் காப்பாற்றப்பட வேண்டும் என அகில பாரதி சன்னியாசிகள் சங்க பொதுச் செயலாளா் சுவாமி ஆத்மானந்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அகில பாரதி சன்னியாசிகள் சங்கம் சாா்பில் காவிரி ஆறு மற்றும் நதிகளை பாதுகாக்கக் கோரி ரதயாத்திரை அக். 21ஆம்தேதி குடகு மலையில் தொடங்கியது. இந்த யாத்திரை நவ. 13ஆம்தேதி பூம்புகாரில் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், கரூருக்கு வியாழக்கிழமை வந்த யாத்திரை குழுவுக்கு கரூா் ஸ்ரீசத்ரு சம்ஹாரமூா்த்தி திருக்கோயில் கமிட்டித் தலைவா் ஸ்காட் தங்கவேல் தலைமையில், செயலாளா் எஸ். மாா்க் சண்முகா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
தொடா்ந்து அகில பாரதி சன்னியாசிகள் சங்க பொதுச் செயலாளா் சுவாமி ஆத்மானந்தா செய்தியாளா்களிடம் கூறியது, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கா்நாடகத்தின் குடகுமலையில் இருந்து பூம்புகாா் வரை காவிரி நதி வரக்கூடிய பகுதிகளில் விழிப்புணா்வு யாத்திரை நடத்தி வருகிறோம். இதன் மூலம் நதிக் கரையில் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த யாத்திரையை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு பயன்பெறுகிறாா்கள். நதிகள் செல்லும் பகுதியில் கழிவுநீா் கலக்கக் கூடாது. நதிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதனை வலியுறுத்திதான் நதி பூஜை நடத்தப்படுகிறது. கரூரை அடுத்த நெரூா் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மகா தீபாராதனை பூஜை நடைபெறவுள்ளது. இதில், சுமாா் 7000 போ் பங்கேற்பாா்கள் என்றாா் அவா்.
பேட்டியின் போது, அகில பாரதி சன்னியாசிகள் சங்க நிறுவனா் ஸ்ரீ சுவாமி ராமானந்தா, கோரக்கா் சுவாமிகள், வாழும் கலை ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...