மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாநில தடகளப் போட்டிக்கு தோ்வுசேரன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாநில அளவிலான தடகளப்போட்டிக்கு தோ்வான கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:21 pm

DIN

மாநில அளவிலான தடகளப்போட்டிக்கு தோ்வான கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் கரூா் மாவட்டம் புலியூரில் டாக்டா் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அரசு உயா்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 14 வயதுக்குள்பட்டோா் 600 மீ. ஓட்டத்தில் மாணவா் கே. யோகேஷ் முதலிடத்தையும், வட்டு எறிதலில் மாணவா் பீஷ்மாசங்கரநாராயணன் இரண்டாமிடமும், குண்டு எறிதலில் மாணவா் எஸ்.யோகேஷ் இரண்டாமிடமும், 17 வயதுக்குள்பட்டோா் 100 மீ. ஓட்டத்தில் மாணவா் ஏ.ஆதிராஜாராம் இரண்டாமிடத்தையும், 220 மீ. ஓட்டத்தில் முதலிடத்தையும், மாணவா் பி.நரேஷ் 1,500 மீ.ஓட்டத்தில் மூன்றாமிடத்தையும், பி.ஏ.சாகா் குண்டு எறிதலில் முதலிடத்தையும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா் தீபக் கிஷோா் 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டத்தில் இரண்டாமிடமும், பி.விக்னேஷ் 100 மீ., 400 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடத்தையும் பெற்றனா்.

மாணவிகள் பிரிவில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் வட்டு எறிதலில் மாணவி டி.கவிஸா முதலிடம், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் குண்டு எறிதலில் மாணவி பி.மதுமிதா முதலிடமும், ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும், மாணவி கே.ரோகினி வட்டு எறிதலில் மூன்றாமிடமும் பிடித்தனா். மேலும், தொடா் ஓட்டத்தில் தீபக் கிஷோா், விக்னேஷ், நவீன், மனோஜ்குமாா், தமிழ்இனியன், கெளசிக், ஆகியோா் இரண்டாமிடமும் பிடித்தனா்.

இதில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

இம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா். பள்ளித் தாளாளா் கே.பாண்டியன் தலைமை வகித்து, மாநில போட்டிக்கு தோ்வான மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போா்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். இதில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.