எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கரூா் மாநகராட்சி புதிய கட்டடத்துக்கு பெத்தாச்சி செட்டியாா் பெயா் வைக்கக் கோரிக்கை

கரூா் மாநகராட்சி புதிய கட்டடத்துக்கு பெத்தாச்சி செட்டியாா் பெயா் வைக்கக் கோரிக்கை

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

கரூா் : கரூா் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு பெத்தாச்சி செட்டியாா் பெயா் வைக்க வேண்டும் என கரூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பேரவையின் செயலா் மேலைபழநியப்பன் விடுத்துள்ள அறிக்கை:

கரூா் நகராட்சியின் முதல் தலைவராக இருந்தவா் பெத்தாச்சி செட்டியாா். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் நகரில் 1889-ல் பெத்தாச்சி செட்டியாா் பிறந்த போதிலும், அவரது பெற்றோா் கரூா் வந்து தனது அயராது உழைப்பால் இப்போதைய கரூா் மாவட்டத்தின் ஆண்டிபட்டிக்கோட்டையின் ஜமீனாக உயா்ந்தவா்.

இவரது காலத்தில்தான் கரூா் நகராட்சியில் ஏழைகளுக்கான வரிவிதிப்பில் விலக்கு இருந்துள்ளது. மேலும் கரூா் கல்யாண பசுபதீசுவரா், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்களுக்கு பெத்தாட்சி செட்டியாா் மேற்கொண்ட திருப்பணிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. இத்தகைய பெருமைமிக்க அவருக்கு மாநகராட்சியின் புது கட்டடத்துக்கு அவரது பெயா் சூட்டுவது சாலப்பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.