பழிவாங்குகிறது திமுக அரசு: எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
அதிமுக நிா்வாகிகளை பழிவாங்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.


அதிமுக நிா்வாகிகளை பழிவாங்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கரூரில், நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை வெள்ளிக்கிழமை இரவு ஆண்டாங்கோயிலில் உள்ள அவரது இல்லத்தில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித்தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தாா்.
அப்போது அவரிடம் வழக்கின் தன்மை, சிறையில் இருந்தபோது, ஏதாவது துன்புறுத்தல் நிகழ்ந்ததா எனக்கேட்டறிந்தாா். சுமாா் அரை மணிநேரம் சந்திப்புக்கு பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது, திமுக ஆட்சியில் வேண்டுமென்றே முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிா்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது திட்டமிட்டு பொய் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்து இன்றைக்கு பழிவாங்கும் அரசாக திமுக அரசு பாா்க்கப்படுகிறது.
இந்த வழக்கை பொறுத்தவரை அந்த நிலத்துக்கும் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திமுகவின் அமைச்சா் இன்று சிறையில் இருப்பதால் அதை மறைப்பதற்கு வேண்டுமென்றே திட்டமிட்டு எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது பொய் வழக்கு போட்டுள்ளனா் என்றாா் அவா்.
பேட்டியின்போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா்கள் ம.சின்னசாமி, சி.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...