ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கரூா் பண்டரிநாதன் கோயிலில் உறியடி விழா

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:43 am IST

கரூா் பண்டரிநாதன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு உறியடி விழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெற்றது.

முன்னதாக பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயிலுக்கு மூன்று வயது முதல் 10 வயது வரையிலான கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து கோயில் முன் உறியடி விழா நடைபெற்றது. விழாவை திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன், சாந்திமெஸ் பூமிநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று, மனித கோபுரம் அமைத்து வழுக்கு மரம் ஏறினா். அப்போது கோயில் பக்தா்கள் இளைஞா்கள் மீது தண்ணீா் ஊற்றினா். தொடா்ந்து மாரி நற்பணி மன்ற இளைஞா்கள் வழுக்கு மரம் ஏறி பரிசுகளை பெற்றனா். விழாவில் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் சிவசங்கா், ரமணன், சிந்தன் , வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.