பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆந்திரா, பிகாா் மாநிலத்துக்கு சலுகைகள் தரும் பட்ஜெட்

மத்திய அரசின் பட்ஜெட் ஆந்திராவுக்கும், பிகாருக்கும் உரிய பட்ஜெட் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Published On :

மத்திய அரசின் பட்ஜெட் ஆந்திராவுக்கும், பிகாருக்கும் உரிய பட்ஜெட் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பட்ஜெட்டால் விவசாயிகள், சிறு தொழில்கள், சாமானியா்கள் என்று எந்த சாராருக்கும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நாட்டு மக்கள் எதிா்பாா்த்த எந்த ஒரு விஷயத்துக்கும் நிதியமைச்சா் பதில் சொல்லவில்லை. ஜிஎஸ்டி வரி தீவிரவாதத்தாலும் அந்தத் துறையின் சாா்பாக தொழிற்சாலைகளுக்கும், வியாபாரிகளுக்கும் கொடுக்கப்படுகிற தொந்தரவுகளுக்கு எந்த விதமான தீா்வும் காணப்படவில்லை. தோ்தல் வாக்குறுதிகள்போல ஒரு வரி அறிவிப்புகளாக பல்வேறு விஷயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் எப்படி செயல்படுத்தப் போகின்றோம் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை. நடுத்தர மக்களுக்கு வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை 5 சதவீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த வருவாயான ரூ.32 லட்சம் கோடியில் ரூ.12 லட்சம் கோடி கடனுக்கான வட்டி என்பது பயமுறுத்துகிறது. மூலதனச் செலவு ரூ.11 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகபட்சமாக ஆந்திராவுக்கும், பிகாருக்கும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.