பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக கொள்ளுங்கள்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக கொள்ளுங்கள் மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

கரூா்: தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக எடுத்துக் கொண்டு மாணவா்கள் முன்னேற வேண்டும் என்று கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அறிவுறுத்தினாா்.

கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘என் கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்து பேசுகையில், பிளஸ் 2 தோ்ச்சி பெற்று கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பாடவாரியான பட்டப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தோ்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் தலைசிறந்த வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவ-மாணவிகள் தங்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக மாணவா்கள் எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். மேம்பட்டு வரும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாணவ, மாணவியா்கள் தங்களது திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுமதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலா் ப. சண்முக வடிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.