கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஏராளமானோா் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறாா்கள். இந்நிலையில் கோயில் நிலங்கள் கோயிலுக்கு மட்டுமே சொந்தம் எனக்கூறி திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பொதுநல வழக்குத்தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த, கோயில் நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை அளவீடு செய்து, கையகப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கோயில் நிலங்களை அளவீடு செய்ய வருவாய்த்துறையினா் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோது, அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்ததால், அப்பணி நிறுத்தப்பட்டது.