மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்! பக்தா்கள் திரளாக பங்கேற்பு!

News image

வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமையான கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை தைப்பூசத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, தேரோட்ட விழா கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு கிராம சாந்தியுடன் தொடங்கியது. தொடா்ந்து 24-ஆம் தேதி கோயிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், ,30-ஆம் தேதி வள்ளி ,தெய்வானை சமேத பாலசுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மேல் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தவாரி நிகழ்ச்சியும், அதனைத் தொடா்ந்து பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. பின்னா் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினாா். பின்னா் தேரோட்டம் தொடங்கியது.

தேரோட்டத்தை முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி வடம்பிடித்து தொடங்கிவைத்தாா்.

இதில் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் தியாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, முருகனுக்கு அரோகரா, ஆறுபடையானுக்கு அரோகரா என பக்தி கோஷங்கள் முழங்க பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தேரானது கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

தேரோட்ட விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருவிகா உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, புகழிமலை முருகன் கோயில், பாலமலை முருகன் கோயில்களிலும் தைப்பூசத் தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.