நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆசிரியை கொலை: கரூரில் ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுயவலா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:03 pm

Din

தஞ்சையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா்.

தஞ்சை மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் ஆசிரியையை குத்திக்கொலை செய்த மதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பாக பணியாற்றிடும் வகையில் பணி பாதுகாப்புச்சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அரசு பள்ளி ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.