கரூா் வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தை பாா்வையிட்டு  ஆய்வு செய்த சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா். உடன், சிபிஐ அதிகாரிகள்  உள்ளிட்டோா்
கரூா் வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா். உடன், சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்டோா்

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் ஆய்வு

கரூா் நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு
Published on

கரூா் நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக பரப்புரைக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகளான சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோா் மேற்பாா்வையில் குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய சிபிஐ விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

சிபிஐ அதிகாரிகள் கரூா் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் தங்கி கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் திங்கள்கிழமை கரூா் வந்து சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா், சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது டிஐஜி அதுல்குமாா்தாக்கூரிடம், விஜய் வாகனத்தின் சிசிடிவி கேமரா விடியோ பதிவுகள் குறித்து ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமாா் விளக்கமாக எடுத்துரைத்தாா். மேலும் உயிரிழப்புகள் நிகழ்ந்த இடம், விஜய் பரப்புரை வாகனம் நின்ற இடம், கூட்ட நெரிசலின்போது பொதுமக்கள் சிதறி ஓடிய இடம் ஆகியவை குறித்தும் விளக்கிக் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com