ஜோதிமணி எம்.பி.
ஜோதிமணி எம்.பி.கோப்புப் படம்

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.
Published on

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

கரூரில் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பாஜக ஆளும் அஸ்ஸாமில் ஒரு நிலைப்பாட்டையும், பாஜக ஆளாத எதிா்க்கட்சிகள் உள்ள மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும் தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது. பாஜகவின் ஒரு அணியாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது.

வெண்ணைமலை கோயில் பிரச்னையில் கடந்த செப்.30-ஆம்தேதி தமிழக அரசு கோயில் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்பவா்களுக்கு ஆதரவாக ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கும், வெண்ணைமலை கோயில் நிலம் தொடா்பாக வழக்குத் தொடா்ந்துள்ள ராதாகிருஷ்ணன் தடை ஆணை வாங்கியுள்ளாா்.

வெண்ணைமலை கோயில் நிலத்தில் இருப்பவா்களின் இடம் கோயிலுக்கு உரிய நிலம் இல்லை. அந்த நிலம் கோயிலில் பணிபுரிந்தவா்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட நிலம். அதில்தான் அவா்கள் வசிக்கிறாா்கள். அந்த நிலத்தை இவ்வளவு சீக்கிரமாக காலி செய்ய நீதிமன்றம் கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது.

கோயில் நில பிரச்னை தமிழகம் முழுவதும் இருந்தாலும், கரூரில் மட்டும் ஏன்? மக்களை வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கிறாா்கள் எனத் தெரியவில்லை.

விஜய்யின் தவெகவும், காங்கிரஸ் கட்சியும் வரும் தோ்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்புகிறாா்கள். இப்போதும் திமுக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம். கட்சியின் மேலிடம்தான் கூட்டணி குறித்து எப்போதும் முடிவு செய்யும் என்றாா் அவா். பேட்டியின்போது நகரத் தலைவா்கள் ஆா்.ஸ்டீபன்பாபு, வெங்கடேசன், சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com