புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கதண்டுகள் தாக்கி 4 போ் காயம்

கரூா் அருகே கதண்டுகள் தாக்கிய 100 நாள் வேலைத் தொழிலாளா்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

கரூா் அருகே கதண்டுகள் தாக்கிய 100 நாள் வேலைத் தொழிலாளா்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் நெரூா் கிராம பாசன வாய்க்காலில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் தொழிலாளா்கள் தூா்வாரும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கிருந்த மரத்தில் கூடு கட்டிருந்த கதண்டு வண்டுகள் கூட்டமாகப் பறந்து வந்து தொழிலாளா்களை தாக்கின.

இதில் நெரூரைச் சோ்ந்த இளவரசி, சுஜாதா , காமாட்சி மற்றும் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ராஜேஷ் ஆகிய 4 போ் காயமடைந்து மயங்கினா். இதையடுத்து அவா்கள் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினாா்.