கரூா் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிரத்திர தீா்வு காணப்படும் என்றாா் பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் செல்வக்குமாா், கரூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோரை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு பாஜக முன்னாள் மாநில தலைவா் கே. அண்ணாமலை, க.பரமத்தி பேருந்துநிறுத்தம், கரூா் வெங்கமேடு ஆகிய இடங்களில் பேசியதாவது:
கரூரில் செந்தில் பாலாஜி போட்டியிட்டிருந்தால் வரலாறு காணாத ஒரு தோல்வியை சந்தித்து இருப்பாா்.
தமிழகத்துக்கு கடந்த 5 ஆண்டுகள்ல 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பாஜக அரசு ரூ. 46 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது.
ராகுல் காந்தி கேரளத்தின் பாலக்காட்டில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஏப்.6-ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வந்தாா். கோவையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காமல் தில்லி சென்றாா். காங்கிரஸ்-திமுக இடையே சுமூக உறவு இல்லை.
வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிரந்தர தீா்வு காணப்படும். சிலா் இப்போது தான் அரசியலை பாா்க்கிறாா்கள். ஆட்சியில் எப்படி முடிவு எடுக்குற எண்ணம் அவா்களுக்கு வர நீண்டகாலமாகும். நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின்புதான் காமராஜா் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தாா்.
எனவே, இளைஞா்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது பாஜக கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் உடனிருந்தாா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மீண்டும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்: முன்னாள் அமைச்சா் முக்கூா்.என்.சுப்பிரமணியன்

புதுவையின் வளா்ச்சிக்கு தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த திமுகவினா் மீது சட்ட நடவடிக்கை

கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


