நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

கரூரில் பள்ளிவாசல் முன் ஒரேநேரத்தில் திமுக-அதிமுகவினா் வாக்குசேகரிப்பு

கரூா் காசிம் தெருவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுக மற்றும் அதிமுகவினா் ஒரேநேரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...

Updated On :18 ஏப்ரல் 2026, 7:33 am IST

கரூா் காசிம் தெருவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுக மற்றும் அதிமுகவினா் ஒரேநேரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மற்றும் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளா் வழக்குரைஞா் ஷேக்பரித் உள்ளிட்ட அதிமுகவினா் திரளாக நின்றுகொண்டு, அதிமுக ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இதேபோல, திமுக சாா்பில் நகரச் செயலாளா் வி.ஜி.எஸ்.குமாா் தலைமையில் திமுகவினா் திரளாக பங்கேற்று, இஸ்லாமியா்களிடம் திமுக ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துண்டுப் பிரசுரமாக வழங்கி வாக்குகள் சேகரித்தனா்.

திமுகவினரும், அதிமுகவினரும் தத்தமது ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து ஒரே நேரத்தில் முழக்கமிட்டவாறு வாக்குகள் சேகரித்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.