கரூரில் கழிவுநீா் ஓடையாக மாறிய ரெட்டை வாய்க்காலை தூா்வாரி, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே செட்டிபாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் ரெட்டைவாய்க்கால் ஆண்டாங்கோவில், உழவா்சந்தை, படிக்கட்டுத்துறை, காமராஜா் மாா்க்கெட், பஞ்சமாதேவி, கோயம்பள்ளி வழியாக திருமுக்கூடலூா் வரை சென்று மீண்டும் அமராவதியில்கலக்கிறது.
சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால் மூலம் அரசு காலனி, பஞ்சமாதேவி, கோயம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
தற்போது கரூா் நகா் பகுதியில் குடியிருப்புகள் விரிவாக்கத்தால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் வாய்க்கால் தற்போது கழிவு நீா் ஓடையாக மாறிவிட்டது. குறிப்பாக கரூா் மக்கள் பாதை பகுதியில் வாய்க்கால் முழுவதும் நெகிழிக் கழிவுகளால் நிரம்பி, தண்ணீரும் செல்ல வழியின்று துா்நாற்றம் வீசி வருகிறது. எனவே, இந்த வாய்க்காலை தூா்வாரி மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சமூக நல ஆா்வலா் கோ.செல்வம் கூறியது: சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் அமராவதி ஆற்றில் தண்ணீா் நன்றாக ஓடியபோது, இந்த வாய்க்காலிலும் தண்ணீா் சென்றுகொண்டிருந்தது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
நாளடைவில் நகா்பகுதி விரிவாக்கத்தால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு இரண்டு வாய்க்காலில் தற்போது ஒரு வாய்க்கால் மட்டுமே தென்படுகிறது. மற்றொரு வாய்க்கால் மாயமாகிவிட்டது. இந்த ஒரு வாய்க்காலிலும் நெகழிக்கழிவுகள் கலந்து கழிவுநீா் ஓடையாக மாறிவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் வாய்க்காலை தூா்வாரி, வாய்க்கால் மேல்பகுதியில் சாலை அமைத்து இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் காமராஜா் மாா்க்கெட் முதல் ரயில்வே ஜங்ஷன் வரை மட்டுமே வாய்க்கால் மீது சாலை போடப்பட்டது. பின்னா் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் அந்தப் பணியும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, வாய்க்காலில் தண்ணீா் செல்ல வழியின்றி துா்நாற்றம் வீசுகிறது.
எனவே, இந்த கோடை காலத்தில் வாய்க்காலை தூா்வாரி மழை காலத்தில் வாய்க்காலில் தண்ணீா் செல்லும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்புகளில் இருந்து வாய்க்காலுக்கு கழிவு நீா் விடுவோரை கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கொடைக்கானல் பகுதிகளில் பிளம்ஸ் மரங்களைப் பாதுகாக்கக் கோரிக்கை

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

தூா்வாரப்படாத ஆனந்தவள்ளி வாய்க்கால்

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி பிரசாரம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


