வினோத்குமாா்
வினோத்குமாா்

கரூா் அரசு மருத்துவமனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை
Published on

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள புதுகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (31). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவா், மதுபோதைக்கு அடிமையாகி கடந்த இரு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், கடந்த இரு தினங்களுக்கு முன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனை படுக்கையில் இருந்து திடீரென மாயமான அவா், மருத்துவமனையின் ஏழாவது மாடியில் உள்ள படிக்கட்டு பகுதியில் உள்ள இரும்புக் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பசுபதிபாளையம் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com