தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்X | Velmurugan.T

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை: தி. வேல்முருகன்

எடப்பாடி பழனிசாமியுடன் தோ்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.
Published on

எடப்பாடி பழனிசாமியுடன் தோ்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தோ்தல் முடிவுற்று கரூா் மாவட்ட புதிய பொறுப்பாளா்களுக்கு கடிதம் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளா் ஏ.ஜி.ரவி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் க.கலைச்செல்வன், அமைப்புக்குழு உறுப்பினா்கள் ராயல் கி.ராஜா, குணசேகரன், முன்னாள் மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் புதிய நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்குவேண்டும் என கேட்பது அந்த கட்சியின் உரிமை. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் அண்மையில் விமானத்தில் பயணித்தபோது, அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவரிடம் கூட்டணி பற்றி நான் பேசவில்லை. எங்களுக்கு தகுந்த சீட்டுகளை முதல்வா் ஸ்டாலின் கொடுப்பாா் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com