கரூா் சம்பவம்: எஸ்.ஐ உள்பட 8 காவலா்களிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 7 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Published on

கரூா் சம்பவம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 7 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 7 காவலா்களிடம் திங்கள்கிழமை காலை சுமாா் 2 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

Dinamani
www.dinamani.com