
கரூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை: கணக்கில் வராத ரூ.13,000 பறிமுதல்!
கரூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

கரூரில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலகம்.
கரூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.13ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் சுவாமிநாதன், தங்கமணி, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 போ் கொண்ட குழுவினா் முதுநிலை நகரமைப்புப் பிரிவு, வருவாய்த்துறை பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களில் சோதனை நடத்தினா்.
நகரமைப்பு முதுநிலை அலுவலா் நாராயணனிடம் விசாரணை நடத்தியபோது அங்கு கணக்கில் வராத பணம் ரூ.13 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சோதனை நடத்திய போலீஸாா், அலுவலா்கள், ஊழியா்கள் ஆகியோரின் கைப்பேசி எண்களையும் பெற்றுக்கொண்டு சென்றனா். மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சூசூவாடி சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.3.40 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.82 லட்சம் பறிமுதல்!




