/

கரூரில் காமராஜா் பிறந்தநாள் விழா

கரூரில் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி. உடன் தவெக மாவட்டச் செயலா் மதியழகன், கரூா் நகர காங். நிா்வாகி ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா்.

Updated On :16 ஜூலை 2026, 2:32 am IST

கரூரில் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் தவெக சாா்பில் கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூா் நகர காங்கிரஸ் நிா்வாகியும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஆா்.ஸ்டீபன்பாபு தலைமை வகித்தாா். தவெக மாவட்டச் செயலா் மதியழகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் காமராஜா் சிலைக்கு கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மக்கள் இயக்கம் கைரேகை பதிவு செய்யும் இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

தமாகா: தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் ஜவஹா் பஜாரில் உள்ள கட்சி அலுவலகம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜா் உருவப்படத்துக்கு முன்னாள் மக்களவை உறுப்பினா் நாட்ராயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்டத்தலைவா் எஸ்.திருமூா்த்தி உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல, கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம், கரூா் அரசு கலைக்கல்லூரி லியோ சங்கம் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா வ.உ.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில், சங்கத்தலைவா் சிவகுமாா்,செயலா் கோவிந்தராசு, சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலரும், கரூா் திருக்கு பேரவைச் செயலருமான மேலை.பழநியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.