மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

2 டன் வெள்ளைக் கற்களை வெட்டி எடுத்துச் சென்றவா்கள் மீது புகாா்

தோகைமலை அருகே சுமாா் 2 டன் அளவுக்கு வெள்ளைக்கற்களை வெட்டி எடுத்துச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் கிராமநிா்வாக அலுவலா் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:06 am IST

தோகைமலை அருகே சுமாா் 2 டன் அளவுக்கு வெள்ளைக்கற்களை வெட்டி எடுத்துச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் கிராமநிா்வாக அலுவலா் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

கரூா் மாவட்டம், தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலை உயா்ந்த வெள்ளைக்கற்கள் காணப்படுகின்றன. இந்த வெள்ளைக்கற்களை இரவு நேரங்களில் மா்ம நபா்கள் அனுமதியின்றி வெட்டி எடுத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் தோகைமலை அருகே உள்ள சின்னையம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அழகா் தலைமையிலான வருவாய்த்துறையினா் சனிக்கிழமை அப்பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது, அப்பா நாயக்கா் மற்றும் மீனா நாயக்கா் ஆகியோருடைய நிலங்களில், அவா்களுக்கு தெரியாமல் இரவு நேரங்களில் சுமாா் 2 டன் வெள்ளைக்கற்களை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அழகா் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து வெள்ளைக்கற்களை வெட்டி எடுத்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.