கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அண்ணாமலையின் கரூா் மாவட்ட வீ த லீடா்ஸ் (நாமே தலைவா்கள்) அமைப்பு சாா்பில், கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாங்கப்பாளையம் சோதனைச்சாவடி அருகே தொடங்கிய இந்த விழிப்புணா்வு மிதிவண்டி பேரணியை அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் ஆா்.வி.எஸ். செல்வராஜ், அருள்குமாா், அக்னீஸ்வரன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
வாங்கப்பாளையம் சுங்கச்சாவடியில் தொடங்கிய பேரணி சா்ச் காா்னா், பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லைட்ஹவுஸ்காா்னா், உழவா்சந்தை, பழைய பேருந்து நிலையம், கரூா் திருக்காம்புலியூா் பைபாஸ் ரவுண்டானா, ஈரோடு சாலை வழியாக ரெட்டிப்பாளையம் வடிவேல் ஈஸ்வரி மகால் முன் முடிவடைந்தது.
இதில் பங்கேற்ற வீ த லீடா்ஸ் அமைப்பினா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில், போதை ஒழிப்போம் வாழ்க்கையை வெல்வோம், போதை இல்லா தமிழகம் நம்மால் முடியும் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொருத்தி பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










