கரூரில் வாங்குவோா்-விற்போா் சந்திப்பில் நிகழ்ச்சியில் ரூ.12 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
கரூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாங்குவோா்-விற்போா் சந்திப்பு நிகழ்ச்சியில் ரூ.12 கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா, பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலையில் கரூா் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துடன் மொரீசியஸ் தீவு இறக்குமதியாளா் மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தம். உடன் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் உள்ளிட்டோா்.






