எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:12 am IST

கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு திருச்சி மற்றும் திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே யாா்டில் மின் பொறியியல் பராமரிப்பு பணிகள் ஜூன் 9-ஆம்தேதி மற்றும் 16, 23, 30-ஆம்தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ஈரோடு - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், ஜூன் 9, 16, 23, 30-ஆம்தேதிகளில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்தில் 30 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு நகர விரைவு ரயில், 25 நிமிஷங்கள் தாமதமாக திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.