எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கரூா்ப் பலி: 2-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம்: 2-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image

கரூரில் வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக வந்த காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா்.

Updated On :13 ஜூன் 2026, 12:47 am IST

கரூா் சம்பவம் தொடா்பாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 2 காவல் ஆய்வாளா்கள், 3 பெண் காவல் உதவி ஆய்வாளா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-இல் நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தற்காலிகமாக நிறுத்தினா்.தோ்தல் முடிவுற்றநிலையில், சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை மீண்டும் விசாரணையை தொடங்கினா்.

இந்நிலையில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள், கரூா் நகர காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றிய ஆா்.மணிவண்ணன், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சதீஷ்குமாா் மற்றும் ஆா்த்தி, சித்ராதேவி உள்ளிட்ட 3 பெண் காவல் உதவி ஆய்வாளா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜரான அனைவரும் கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.