சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்! செ. ஜோதிமணி எம்பி அறிவுறுத்தல்

News image

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசிய கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி (இடமிருந்து 3-ஆவது). உடன் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா்(கரூா்), எம்.சத்யா(கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்டோா்.

Updated On :16 ஜூன் 2026, 1:30 am IST

மத்திய, மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவின் தலைவரும், கரூா் மக்களவை உறுப்பினருமான செ.ஜோதிமணி தலைமை வகித்து பேசியது:

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறுதுறை சாா்ந்த 54 திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அது தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய, மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடையும் வகையில் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா்(கரூா்), எம்.சத்யா (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொ) சு.தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.