திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் தனிநபரிடமிருந்து மீட்பு

கரூா் வெண்ணைமலையில் வெள்ளிக்கிழமை தனிநபரிடமிருந்த கோயில் நிலத்தை மீட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிலங்களுக்கு குத்தகை செலுத்தாதவா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா்.

News image
கரூா் வெண்ணைமலையில் வெள்ளிக்கிழமை தனிநபரிடமிருந்த கோயில் நிலத்தை மீட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிலங்களுக்கு குத்தகை செலுத்தாதவா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா்.
Updated On :6 மார்ச் 2026, 9:30 pm

Syndication

கரூா் வெண்ணைமலையில் வெள்ளிக்கிழமை தனிநபரிடமிருந்த கோயில் நிலத்தை மீட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிலங்களுக்கு குத்தகை செலுத்தாதவா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா்.

கரூா் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக சுமாா் 560 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பெரும்பாலானோா் கடந்த 1962 -ஆம் ஆண்டுகளுக்கு முன்பே வருவாய்த்துறை மூலம் முறையாக பட்டா பெற்று வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்நிலையில் கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் கோயிலுக்கு உரிய வாடகை அல்லது குத்தகை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தொண்டா் அறக்கட்டளை நிறுவனா் ராதாகிருஷ்ணன் என்பவா் கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடா்ந்தாா்.

இதையடுத்து கோயில் நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அதிகாரிகள் கடந்து சில மாதங்களாக கோயில் நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவா்களின் வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கணபதி முருகன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் ஆகியோா் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா் மகேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் திலகவதி ஆகியோா் வெண்ணைமலை கடைவீதியில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பன்னீா்செல்வம் என்பவரின் 3 சென்ட் நிலத்தை மீட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எச்சரிக்கை பலகையை நட்டு வைத்தனா். மேலும் கோயில் நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து, நீதிமன்றத்தில் வழக்குத்தொடராத 10 பேரிடம், கோயில் நிலத்துக்குரிய வாடகையோ அல்லது குத்தகையோ செலுத்த வேண்டும், இல்லையென்றால் சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் வழங்கினா்.