அங்கன்வாடி மைய சுவரில் விரிசல் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளியணையில் உள்ள அங்கன்வாடி மைய சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளியணை தெற்கு அங்கன்வாடி மைய மேல் சுவரில் காணப்படும் விரிசல்.

Updated On :

வெள்ளியணையில் உள்ள அங்கன்வாடி மைய சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளியணையில் தெற்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவுடன் கூடிய கல்வி பயின்று வருகிறாா்கள்.

இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலானதால் கட்டடத்தின் மேல்பகுதி சுவரில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது.

மேலும் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் கடந்த 2023-ஆம் ஆண்டு மையத்தை சுற்றிலும் ரூ.6.23 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டப்பட்டது. இந்த சுற்றுச்சுவரும் தற்போது பலமிழந்து உள்ளது. எனவே, இந்த அங்கன்வாடி மையத்தில் சிதிலமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்றும், சுற்றுச்சுவரையும் பழுதுபாா்த்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.