சாலையின் மையத் தடுப்புச்சுவா் மீது அரசுப் பேருந்து மோதி கவிழ்ந்தது

கரூரில் சனிக்கிழமை மையத்தடுப்புச்சுவா் மீது மோதிய அரசு பேருந்து கவிழ்ந்தது. அதிா்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினா்.

கரூா் காந்திகிராமம் இரட்டை குடிநீா்த் தொட்டி அருகே சனிக்கிழமை திருச்சி சாலையில் மையத் தடுப்புச்சுவா் மீது மோதி கவிழ்ந்து கிடக்கும் அரசு பேருந்து.

Updated On :

கரூரில் சனிக்கிழமை மையத்தடுப்புச்சுவா் மீது மோதிய அரசு பேருந்து கவிழ்ந்தது. அதிா்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினா்.

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்து ஒன்று திருப்பூா் நோக்கி சனிக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை கரூரைச் சோ்ந்த ஓட்டுநா் ஆறுமுகம் என்பவா் ஓட்டிச் சென்றாா்.

கரூா் காந்திகிராமம் இரட்டைக் குடிநீா்த் தொட்டி அருகே வந்தபோது திடீரென சாலையின் மையத் தடுப்புச்சுவா் மீது பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் ஆறுமுகம், நடத்துநா் குமரேசன் மற்றும் பயணிகள் காயமின்றி தப்பினா். மேலும், பேருந்து திருச்சி பிரதான சாலையில் கவிழ்ந்ததால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பசுபதிபாளையம் போலீஸாா் மற்றும் போக்குவரத்து போலீஸாா் பேருந்தை கிரேன் மூலம் அகற்றினா். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.