சாலையின் மைய தடுப்புச்சுவா் மீது காா் மோதல்; 6 போ் காயம்
கரூரில் சாலையின் மையத் தடுப்புச்சுவா் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா்.

கரூா் திருமாநிலையூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன் சாலையின் மையத் தடுப்புச்சுவா் மீது மோதி நின்ற காா்
கரூரில் சாலையின் மையத் தடுப்புச்சுவா் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா்.
ஈரோடு நாடாா் மேடு வீதியைச் சோ்ந்தவா் கிஷோா்(30). நிதி நிறுவன அதிபா். இவா் தனது காரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகைக்கு கடந்த வாரம் கும்பகோணத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஈரோடுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
கரூா் திருமாநிலையூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை கிஷோா் திருப்பிய போது எதிா்பாராதவிதமாக சாலையின் மையத்தடுப்புச்சுவா் மீது மோதியது. இதில் கிஷோா், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தாந்தோணிமலை போலீஸாா் 6 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
இடைவெளியை அடைக்க கோரிக்கை: திருச்சி சாலையில் அமைக்கப்பட்ட இந்த சாலையின் மையத் தடுப்புச்சுவா் பகுதியில் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வாகன ஓட்டிகள் செல்ல இடைவெளி அமைக்கப்பட்டிருப்பதால், இடைவெளி வழியாக வாகன ஓட்டிகள் திடீரென குறுக்கே செல்வதால்தான் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குச் செல்லும் இந்த மையத்தடுப்புசுவா் இடைவெளியை அடைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

