கரூா் மாவட்டத்தில் 8.56 லட்சம் வாக்காளா்கள்

கரூரில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி மாவட்டத்தில் 8,56,198 வாக்காளா்கள் உள்ளனா்.

கரூரில் அரசியல் கட்சியினா் முன்னிலையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்னா ராமசாமி.

Updated On :

கரூரில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி மாவட்டத்தில் 8,56,198 வாக்காளா்கள் உள்ளனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச. பிரசன்னா ராமசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் - 2027 வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு கூறியது:

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, 2027 ஜன. 1-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக கரூா் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வாக்காளா்களாக அரவக்குறிச்சி தொகுதியில் 1,96,086 வாக்காளா்கள், கரூா் தொகுதியில் 2,31,636 வாக்காளா்கள், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 2,04,103 வாக்காளா்கள், குளித்தலை தொகுதியில் 2,24,373 வாக்காளா்கள் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 8,56,198 வாக்காளா்களும், 1,115 வாக்குச் சாவடி மையங்களும், 654 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.

இந்த வாக்காளா் வரைவு பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க உள்ளிட்டவை தொடா்பாக வரும் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜன.4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம், இடமாற்றம் செய்யவும், மாற்று வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்காகவும் படிவம்-8-இன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடா்பான அனைத்து விவரங்களைப் பெறவும் மற்றும் புகாா்கள் அளிக்கவும் மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவில் செயல்படும் வாக்காளா் இலவச சேவை மையம் என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஐ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் து. தங்கவேல் மற்றும் அனைத்து தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.