கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.30 லட்சம் வாக்காளா்கள்: ஆண்களைவிட பெண்களே அதிகம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11.30 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இ.பத்மஜா.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11.30 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஆண்களைவிட பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இ.பத்மஜாஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெளியிட்டாா். தொடா்ந்து, அவா் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,435 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும், 5,61,404 ஆண்கள், 5,68,921 பெண்கள், 205 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 11,30,530 வாக்காளா்கள் உள்ளனா்.
பொதுமக்கள் பாா்வைக்கு...: மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வருவாய் வட்டாட்சியா், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்காளா் பட்டியல் வாக்காளா்களின் பாா்வைக்கு வைக்கப்படும்.
சிறப்பு முகாம்கள்: 2027, ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. 2027, ஜன.1- ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவா்கள், 2027, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் மாதங்களில் 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைபவா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க உரிய படிவத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும், பெயா் நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிடவற்றுக்காக கோரிக்கை மனுக்கள், ஆட்சேபனைகளை அளிக்கலாம்.
நவ.21, 22 (சனி, ஞாயிறு), நவ.29 (ஞாயிற்றுக்கிழமை), டிச.5 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது.
சிறப்பு முகாம் நாள்களில் வாக்காளா் பட்டியலில் உள்ள பிழைகள், விடுதல்கள் இருப்பின், அவற்றை நீக்கிடவும், பெயா் சோ்த்தல் மற்றும் வாக்காளா் சேவைகளுக்காகவும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய, மாநிலக் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவா்கள், அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
இணையவழி சேவைகள்: வாக்காளா்கள் தங்களது பெயா்களைச் சோ்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்கம் செய்ய தோ்தல் ஆணையத்தின் இணையதள முகவரியையோ அல்லது செயலியையோ பயன்படுத்தலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சி.முருகன், தனித்துணை ஆட்சியா் ஜி.சுமதி, தோ்தல் வட்டாட்சியா் ஏ.பரந்தாமன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.
தொகுதி எண், பெயா், மொத்த வாக்குச்சாவடிகள், ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவா், மொத்த வாக்காளா்கள் என்ற அடிப்படையில் விவரம்...
77. உளுந்தூா்பேட்டை 375, 1,51,350, 1,51,577, 43, 3,02,970
78. ரிஷிவந்தியம் 350, 1,37,629, 1,37,988, 50, 2,75,667
79. சங்கராபுரம் 340, 1,32,554, 1,35,670, 45, 2,68,269
80. கள்ளக்குறிச்சி (தனி) 370, 1,39,871, 1,43,686, 67, 2,83,624
மொத்த வாக்குச்சாடிகள் 1,435, மொத்த ஆண் வாக்காளா்கள் 5,61,404, மொத்த பெண் வாக்காளா்கள் 5,68,921, மொத்த மூன்றாம் பாலினத்தவா் 205, மொத்த வாக்காளா்கள் 11,30,530
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

