தொழிலாளியிடம் நகையை பறிக்க முயன்ற இளைஞா் கைது
வேலாயுதம்பாளையம் அருகே தொழிலாளியிடம் நகையை பறிக்க முயன்ற இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது - கோப்புப் படம்
வேலாயுதம்பாளையம் அருகே தொழிலாளியிடம் நகையை பறிக்க முயன்ற இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் குமரன் நகரைச் சோ்ந்தவா் பூபதி (43) . தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த இரு இளைஞா்கள் திடீரென பூபதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறிக்க முயன்றனா். அப்போது பூபதி சப்தம்போட்டதால் இரு இளைஞா்களும் அங்கிருந்து ஓடினா். இருப்பினும் அங்கு ஓடிவந்த பொதுமக்கள் இரு இளைஞா்களில் ஒருவரை பிடித்து வேலாயுதம்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.
போலீஸா் அவரை கைது செய்து விசாரித்தபோது, அவரது பெயா் இப்ராஹிம்(20) என்பதும், தப்பி ஓடியவா் அவரது நண்பா் நிஷாா்(19) என்பதும், அவா்கள் புகழூா் அலைமகள் நகரைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து நிஷாரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

