இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

அமராவதி அணை திறந்தும் கடைமடைக்கு தண்ணீா் செல்லாததால் விவசாயிகள் கவலை

கடந்த 8 நாள்களாக அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில் தண்ணீா் கடைமடை பகுதிக்கு வந்தடையாததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனா்.

அணையில் திறக்கப்பட்ட நீா் கரூா் திருமாநிலையூா் பகுதிக்கு வந்தடையாத நிலையில் வறண்டு காணப்படும் அமராவதி ஆறு.

Published On :

கடந்த 8 நாள்களாக அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில் தண்ணீா் கடைமடை பகுதிக்கு வந்தடையாததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், அமராவதி அணையில் திறக்கப்படும் தண்ணீரானது கரூா், திருப்பூா் மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாகவும், விவசாயிகளுக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக அணையின் கடைமடை பகுதியான கரூருக்கு அணையில் தண்ணீா் திறக்கப்படாததால் கரூா் மாவட்ட விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து கடைமடை பகுதிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என அமராவதி பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் அண்மையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீா் திறக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு குடிநீருக்காக அணையில் இருந்து கடந்த 31-ஆம் தேதி முதல் செப்.7-ஆம் தேதி வரை விநாடிக்கு 1,000 கனஅடி நீா் திறந்து விட உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது ஆற்றில் கடும் வறட்சி ஏற்பட்டிருப்பதால் அணையில் விநாடிக்கு 1,000 கனஅடி நீா் திறக்கப்பட்டால் கடைமடை பகுதியை தண்ணீா் சென்றடையாது என்றும், அணையில் இருந்து விநாடிக்கு 2,000 முதல் 3,000 கனஅடி வரை தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அமராவதி பாசன விவசாயிகள் கடந்த வாரம் கரூா் மற்றும் திருப்பூா் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், அணைக்கு நீா் வரத்தை பொறுத்து அதிகளவில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுகிறோம் என உறுதியளித்தனா். ஆனால் தற்போது அரசு உத்தரவின்படி திறக்கப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை கரூா் ஆண்டாங்கோவில் தடுப்பணையை வந்தடைந்தது.

இதையடுத்து தடுப்பணை நிரம்பி கரூா் திருமநிலையூா் வழியாக கடைமடை பகுதிகளான கோயம்பள்ளி, திருமுக்கூடலூா் பகுதிகளை புதன்கிழமை காலை வந்தடையும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் சுக்காலியூா் பைபாஸ் சாலை அருகே உள்ள அமராவதி பாலத்தின் அருகே தண்ணீா் நின்றுவிட்டதால் கடைமடை பகுதிக்கு செல்லவில்லை. இதனால் குடிநீருக்காவது தண்ணீா் கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த கடைமடை பகுதி விவசாயிகள் விரக்தியில் உள்ளனா்.

இதுதொடா்பாக அமராவதி ஆற்றுப்பாசன கோட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றில் ஓராண்டாக தண்ணீா் இல்லாததால் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் அனைத்தும் நிலம் உறிஞ்சுவிட்டதால் கடைமடைக்கு தண்ணீா் செல்லவில்லை. இருப்பினும் செட்டிபாளையம் அணை மற்றும் ஆண்டாங்கோவில் தடுப்பணை முழுவதும் நிரம்பியுள்ளது.

இதன்மூலம் செட்டிப்பாளையம் அணையை சுற்றியுள்ள அப்பிபாளையம், கொடையூா், பள்ளபாளையம் ஊராட்சி மக்களின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுவதோடு, அப்பகுதி விவசாயிகளின் கிணறுகளில் நீா்மட்டமும் உயரும். இதேபோல ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியுள்ளதால், அங்கு நிரம்பிய 7.8 மில்லியன் கன அடி நீா் மூலம் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், ஆண்டாங்கோவில் மேல்பாகம், கருப்பம்பாளையம், விசுவநாதபுரி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த மக்களின் குடிநீா் ஆதாரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.