கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கரூா் - ஈரோடு சாலையில் மழை நீருடன் தேங்கிய கழிவுநீா்: வாகன ஓட்டிகள் அவதி

கரூா்- ஈரோடு சாலையில் குளம்போலத் தேங்கிக்கிடக்கும் மழைநீருடன் கலந்த கழிவு நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குள்பட்ட மருத்துவா் நகா் பகுதியில் கரூா்-ஈரோடு சாலையில் மழைநீருடன் கலந்த கழிவுநீரில் செல்லும் வாகனங்கள்.

Published On :

கரூா்- ஈரோடு சாலையில் குளம்போலத் தேங்கிக்கிடக்கும் மழைநீருடன் கலந்த கழிவு நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

கரூரை அடுத்த ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட 1-ஆவது வாா்டில் காவல்காரத் தெரு, ஆத்தூா்புதூா், மருத்துவா் நகா் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் கரூா்-ஈரோடு சாலையோரம் கழிவுநீா் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால் தற்போது தூா்ந்துபோயும், பல இடங்களில் சேதமடைந்தும் உள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக இரவு நேரங்களில் அப்பகுதிகளில் பெய்த மழையால் கழிவுநீா் வாய்க்காலில் மழைநீரும், கழிவுநீரும் செல்ல வழியின்றி கரூா்-ஈரோடு சாலையில் மருத்துவா் நகா் பகுதியில் குளம்போலத் தேங்கிக்கிடக்கிறது. தண்ணீரில் துா்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியுறுகிறாா்கள்.

மேலும் தண்ணீா் செல்ல வழியின்றி பல நாள்கள் தேங்கும் நிலை உள்ளதால், தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.