கலை விழாவில் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தென்னிந்திய அளவிலான கலை விழாவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
Updated on
1 min read

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தென்னிந்திய அளவிலான கலை விழாவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
 கர்நாடக மாநிலத்தில் குல்பர்கா பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவில் கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
 இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்ற ரோவர் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏ. விக்னேஷ், பி. மணிகண்டன், சு. சரத்குமார், பி. பார்த்திபன் ஆகியோர் குறு நாடகத்தில் முதல் பரிசும், கிராமிய நடனம் மற்றும் பாவனை நாடகத்தில் இரண்டாம் பரிசும் பெற்றனர். மேலும், அடுத்த மாதம் மேற்குவங்க மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற உள்ள கலைப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். பரிசு பெற்ற மாணவர்களை ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன், துணை தாளாளர் வி. ஜான் அசோக், கல்லூரி முதல்வர் ஏ. அயோத்தி ஆகியோர் பாராட்டி வியாழக்கிழமை பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது, துணை முதல்வர்கள் கோ. ரவி, டி. லீமாபீட்டர், டீன் ஏ. சேவியர் அமலதாஸ், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் க. மருததுரை, அலுவலக மேலாளர் ஆர். ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com