தீக் காயமடைந்த பெண் சாவு

பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி காந்திநகரைச் சேர்ந்த சின்னதுரை மனைவி தீபா (28). இவர் கடந்த 27-ம் தேதி காலை அவரது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமைடந்த அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலமேடு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com