மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் திகிச்சை முறைகளை 
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் திகிச்சை முறைகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
  பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து ஆட்சியர் வே. சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அப்போது, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சுழற்சி முறையில் வருகிறார்களா, உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
 பின்னர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  
 மேலும், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கண்டறிய உதவும் செல் கவுன்ட்டர் கருவிகளை பார்வையிட்டு, ஒரு நாளைக்கு எத்தனை நோயாளிகளுக்கு செல் கவுன்ட்டர் கருவி மூலமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் இருப்பதை கண்டறிய முடியும் என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  தொடர்ந்து, பிரசவ வார்டுக்கு சென்ற ஆட்சியர், அங்குள்ள தாய்மார்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
 பின்னர், மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என மருத்துவர்களிடம் ஆட்சியர் சாந்தா அறிவுறுத்தினார். 
 இந்த ஆய்வின்போது, மருத்துவப் பணிகளை இணை இயக்குநர் செல்வராஜன், கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவர் ராஜன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com