பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இரு பிரிவினரிடையே புதன்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பாக கை.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிண்டல் செய்தாராம். இதையறிந்த மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் வீடு, சுமை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஒரு தரப்பினர் சேதப்படுத்தினர். மேலும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் சிவக்குமார் (34), அழகுவேல் (32), மணிவேல் (21) உள்பட 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த மங்களமேடு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், பெரம்பலூர் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பேச்சு வார்த்தை மேற்கொண்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கை. களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இரு பிரிவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (35), மணிவேல் (30), மணிகண்டன் (35), வீரராகவன் (26), ரமேஷ்குமார் (24), பிரவீன்குமார் (20) உள்பட 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.